பஞ்சாப் மாநிலத்தில் இயங்கி வரும் 112 பள்ளிகளில் சுமார் 5500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். மாநிலத்தில் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில் ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது அரசு பள்ளி ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவது குறித்தும் பள்ளி நேரங்களில் பள்ளிக்குள் ஆசிரியர்கள் இருப்பதை உறுதி செய்யவும் செயற்கை நுண்ணறிவு முறையிலான செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தற்போது வரை அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது எந்தவித குற்றச்சாட்டும் இல்லாமல் இருந்தாலும் இனி வரும் காலங்களில் இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் இருந்தால் மட்டுமே இந்த செயலிகள் மூலமாக வருகையை பதிவு செய்ய முடியும். இந்த புதிய திட்டம் வருகின்ற ஏப்ரல் மாதத்திற்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் மதிய உணவின் தரம் மற்றும் பள்ளிகளின் தூய்மை ஆகியவற்றையும் கண்காணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.