இந்தியாவில் 2004 ஆம் ஆண்டு NPS ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில் ஆரம்ப கட்டத்தில் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே அமல்படுத்தப்பட்ட இந்த திட்டம் தற்போது அனைத்து குடிமக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் நிர்வகித்து வருகிறது. இதில் வருமான வரி சட்டத்தின் கீழ் வரி விலக்கு சலுகையும் வழங்கப்படும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் தற்போது குறிப்பிட்ட ஓய்வூதிய தொகையை எடுத்துக் கொள்ளும் வசதி பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான புதிய விதிமுறைகளை அரசு வெளியிட்டுள்ள நிலையில் இந்த திட்டத்தின் பயனாளிகள் 25 சதவீதம் தொகையை திரும்ப பெற முடியும். அதாவது குழந்தைகளின் உயர்கல்வி, திருமண செலவு, வீடு அல்லது பிளாட் வாங்குதல் மற்றும் மருத்துவ செலவுகளுக்காக மட்டுமே இந்த தொகையை நீங்கள் பெற முடியும். அதே சமயம் நீங்கள் பெற இருக்கும் தொகையை சுய அறிக்கையாக இணையதளத்தில் பதிவிட வேண்டும் எனவும் அதன் பிறகு வங்கி கணக்கு தொகை மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.