உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயிலுக்கு செல்ல பயணத்திட்டங்கள் தயாராகி வருகிறது. நாட்டின் பல பகுதிகளிலிருந்து ரயில்கள் மூலமாக அதிகப்படியான மக்கள் பயணம் செய்ய முடிவு செய்துள்ளார்கள். இதற்காக இந்திய ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.  தொடர்ந்து ரயில்களை இயக்கம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் அயோத்தி செல்லும் பெண்களுக்கு மகிழ்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது இலவசமாக வளையல், பிரேஸ்லெட் வழங்கப்பட உள்ளது. அதாவது பிரோசாபாத் நகரம் கண்ணாடி வளையல்கள் தயாரிப்புக்கு மிகவும் புகழ் பெற்றது. பல மாநிலங்களில் பல பகுதிகளிலிருந்து இங்கிருந்து விற்பனைக்காக சென்று கொண்டு செல்வார்கள். ஏராளமான வளையல் வியாபாரிகள் சிறப்பான முறையில் வர்த்தகம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பரிசாக வழங்கப்படும் வளையல் மற்றும் பிரேஸ்லெட்டில் ராமர், சீதா, அனுமன் ஆகியோரின் உருவங்கள் பதிக்கப்பட்டு இருப்பது இந்த வளையலின் கூடுதல் சிறப்பு. லட்சக்கணக்கான பக்தர்கள் அனைவருக்கும் வளையல்கள் பரிசாக வழங்குவது கடினம். எனவே பத்தாயிரம் பெண் மக்களுக்கு இலவசமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.