அன்றாட சமையலுக்கு தேவையான மிக முக்கியமான பொருள்களில் வெங்காயம் என்பது பிரதானமானது. இந்த நிலையில் இந்திய சந்தைகளில் வெங்காயத்தின் விலை ஒரு நிலையாக இல்லாமல் அவ்வப்போது ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது. இந்த நிலையை மாற்றுவதற்காக டிஜிட்டல் தளம் ஒன்றை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் மூலம் வெங்காயம் கொள்முதல், விற்பனை மற்றும் கையிருப்பு நிலைய ஆகியவற்றை கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.