திருவண்ணாமலை செங்கம் அருகே அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பக்கிரிபாளையம் அருகே அரசுப் பேருந்து ஒன்று பெங்களூரு நோக்கிச் சென்றுகொண்டிருந்த கார் மோதியது. இதில், காரில் பயணம் செய்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கார், பேருந்தில் பயணம் செய்த 14-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் சம்பவ இடத்திலும், 2 பேர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். விபத்தில் பலியானவர்கள் யார்? விபத்து நிகழ்ந்தது எப்படி? என மேல்செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதல்…. 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…!!
Related Posts
வெயிலின் தாக்கத்தால் ஒருவர் உயிரிழப்பு…. தமிழகத்தில் சோகம்…!!
கேரளா மாநிலம் வாரநாடு புதுவேலி பகுதியைச் சேர்ந்த கோபிநாதன் என்பவரின் மகன் ராஜேஷ் குமார் (47). இவர், மதுரை மாவட்டம் மேலூர் அருகே காலை நேரத்தில் மதுரை – திருச்சி தேசிய நான்கு வழிச்சாலையில் தும்பைப்பட்டி என்ற இடத்தில் உள்ள ஓய்வறை…
Read moreநீலகிரி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர்…. இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரி அறிவிப்பு…!!
நீலகிரி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரி அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்க மே 7-ஜூன் 30 வரை ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, சுற்றுலா செல்வோர் இந்த இணையதளத்தில் நாளை…
Read more