நாமக்கல்லைச் சேர்ந்த பிரபல அரசியல் ஜோதிடரான சங்கரய்யர் (92) நேற்று (அக்.23) காலமானார். 2 ஆண்டுகளுக்கும் மேலாக உடல்நலக் குறைவால் இவர் அவதிப்பட்டு வந்தார். முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜானகி அம்மாள், தொழிலதிபர்கள் ஆகியோருக்கு அரசியல் விஷயங்களில் ஜோதிட கருத்துகளைக் கூறி வந்தவர்.

இந்நிலையில் இன்று சங்கரய்யர் தனது 92 வயதில் உடல்நலக் குறைவால் காலமானார். மேலும், சங்கரய்யரின் இறுதிச் சடங்குகள் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.