மத்திய மேற்கு வங்க கடலில் ஹாமூன் என்று பெயரிடப்பட்ட புயல் உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து 25ஆம் தேதி வங்கதேசத்தில் கரையை கடக்க இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக மதிய வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்ஓன்று புயலாக வலுப்பெற்று இருக்கிறது. அரபிக் கடலில் இருந்த தேஜ் புயல் எமன் நாட்டில் தற்போது கரையை கடந்து கொண்டு இருக்கின்றது.