பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திஷா பதானி. இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் கங்குவா படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை திஷா பதானி பாலிவுட் நடிகர் டைகர் ஷெராபை காதலித்து வந்த நிலையில் அவருடன் பிரேக்கப் செய்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து தற்போது வெளிநாட்டு மாடலான அலெக்சாண்டர் என்பவருடன் டேட்டிங்கில் இருக்கிறார். இந்நிலையில் நடிகை திரிஷா பதானி தன்னுடைய தோழி மற்றும் அலெக்சாண்டர் ஆகியோருடன் வெளியே சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அலெக்சாண்டர் தன்னுடைய கையில் நடிகை திஷாவின் முகத்தை டாட்டூவாக பதித்துள்ளார். மேலும் இதை பார்த்த நெட்டிஷன்கள் பலரும் இது நடிகை திஷாவின் டாட்டூவா என்ற கேள்வி எழுப்பி வருகிறார்கள்.