தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் மிக முக்கியமான பணியைச் செய்யும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களின் நலன் கருதி, அவர்களின் தொகுப்பூதியத்தை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுவரை இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.4,000-லிருந்து ரூ.5,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.இந்த ஊதிய உயர்வு மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 40,419 ஊழியர்கள் நேரடியாகப் பயன்பெறுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஊதிய உயர்வுக்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனால் பிப்ரவரி மாதம் முதல் இவர்களுக்கு உயர்த்தப்பட்ட புதிய ஊதியம் கிடைக்கும் எனத் தெரிகிறது.
