விருதுநகரில் நேற்று நடைபெற்ற திமுக தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, திமுக இளைஞரணி என்பது தமிழக மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்குவதாகவும், கட்சித் தலைவர் இடும் கட்டளைகளை உடனுக்குடன் களத்தில் இறங்கிச் செய்து முடிக்கும் ஆற்றல் தங்களுக்கு இருப்பதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மேலும், கொள்கையோ லட்சியமோ இல்லாமல் வெறும் சத்தம் போட்டுக்கொண்டு சுற்றித் திரியும் கூட்டங்களால் தமிழகத்திற்கு எந்தப் பயனும் இல்லை என்று அவர் விமர்சித்தார்.

அரசியல் அறிவில்லாதவர்கள் என்னதான் புலம்பினாலும், வரப்போகும் தேர்தல்களில் திமுகவே மீண்டும் வெற்றி பெறும் என்று அவர் தொண்டர்களிடையே உறுதியாகத் தெரிவித்தார்.