விஜய்யின் அரசியல் வருகை குறித்து காட்டமாக விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் SP சண்முகநாதன். பேட்டியளித்த அவரிடம், விஜய் அரசியலுக்கு வந்தால் இளைஞர் பட்டாளம் அவர் பக்கம் சாயுமா என கேட்கப்பட்டது. இதற்கு அவர், “எல்லாரும் MGR ஆகிட முடியாது. விஜயகாந்த், கமல் சிவாஜி என யார் யாரோ வந்தும் சாதிக்க முடியவில்லை. ரசிகர் கூட்டத்தால் படம் ஓடுது. பணம் இருப்பதால் விஜய்யால் முதல்வராகிவிட முடியாது.

இதற்கு முன்னதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜயகாந்த் எங்கோ காணாமல் போய்விட்டார். அது மட்டும் இல்லாமல் நடிகர்கள் சிவாஜி கணேசன், சரத்குமார், கமலஹாசன் என்று சுட்டிக்காட்டினார். அனைத்து கட்சிகளுமே அதிமுக ஆகிவிட முடியாது. அமமுக, ஓபிஎஸ் தனியாக நின்றாலுமே அதிமுகவின் வாக்கு வங்கி குறையவில்லை என்று கூறியுள்ளார்.