தேனி மாவட்டத்தில் கருநாக்கமுத்தன்பட்டி என்னும் கிராமத்தில் கிரண் (26) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு மரமேறும் தொழிலாளி. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை வழக்கில் கைதான இவர் தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளார். இந்நிலையில் இவர் சிறையில் இருக்கும் போது அவரது தாயை நாய் ஒன்று கடித்தது. இதனால் கோபமடைந்த கிரண் சிறையில் இருந்து வெளிவந்ததும் அந்த நாயை தேடி இருசக்கர வாகனத்தில் சென்றார்.

அதன்பின் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த நாயைப் பார்த்த அவர் அதன் காலை பிடித்து தரையில் அடித்து கொன்றுள்ளார். இதை பார்த்து அருகிலுள்ளவர்கள் தட்டிக் கேட்டபோது அவர்களிடம் கிரண் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதுகுறித்து அருகிலுள்ளவர்கள் காவல்துறையினருக்கு புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கிரணை கைது செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.