அமெரிக்காவில் மேரிலாந்து மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள 19 அடி உயர அம்பேத்கர் சிலையானது அக்டோபர் 14ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. இந்த சிலைக்கு சமத்துவத்தின் சிலை என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலைகளிலேயே மிக உயரமான சிலை இதுவாகும். அகமதாபாத்தில் அமைந்துள்ள வல்லபாய் படேல் சிலையை உருவாக்கிய புகழ்பெற்ற சிற்பி ராம்சுடார்தான் இந்த சிலையையும் உருவாக்கி இருக்கிறார்.