அத்தை மற்றும் மாமா பிள்ளைகள் போன்ற மிக நெருங்கிய சொந்தங்களுக்குள் திருமணம் செய்து கொள்ளும் ‘கசின் மேரேஜ்’ (Cousin Marriage) முறைக்கு முற்றிலும் தடை விதிக்கும் புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதா ஒன்று ஸ்வீடன் நாட்டு நாடாளுமன்றத்தில் அதிரடியாக நிறைவேற்றப்பட்டுள்ளது சர்வதேச அளவில் மிகப்பெரிய விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
சொந்தங்களுக்குள் திருமணம் செய்வதால் ஏற்படும் குடும்ப அழுத்தங்கள் மற்றும் பிறக்கும் குழந்தைகளுக்கு உண்டாகும் மரபணு சார்ந்த பிறப்புக் குறைபாடுகள் உள்ளிட்ட தீவிரப் பிரச்சினைகளைத் தடுப்பதற்காகவே இந்த புதிய கடுமையான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த அதிரடித் தடைச் சட்டம் வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும் என்றும் ஸ்வீடன் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. சொந்த பந்தங்களுக்குள் திருமணம் செய்யும் வழக்கம் உள்ள பல நாடுகளுக்கு மத்தியில், ஸ்வீடன் அரசு எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு தற்பொழுது நெட்டிசன்கள் மத்தியில் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
