Youtube சேனல் நடத்தி வரும் எய்டன் என்பவர் சராசரியாக ஏழு வருடங்கள் தன்னுடைய தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்தாமல் இருந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், என்னுடைய தலைமுடி ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் தற்போது இருக்கிறது. இப்படி வளரும் என்று எதிர்பார்க்கவில்லை. இன்றோடு கிட்டத்தட்ட ஷாம்பு பயன்படுத் தி  ஆறு வருடங்களுக்கு மேல் ஆகிறது. எந்த ஒரு கண்டிஷனரும் பயன்படுத்தாமல் என்னுடைய தலை முடி மற்றும் தலையின் ஆரோக்கியத்தை சோதனை செய்து பார்க்கப் போகிறேன் என்று  பேசியுள்ளார்.

இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பாக தலையில் அதிகமான பொடுகு இருந்த காரணத்தால் நிறைய ஷாம்புகளை பயன்படுத்தியுள்ளார். பின்னர் அவர் தலையில் தலைமுடியே இல்லாமல் இருந்தது. இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அந்த வீடியோவோடு இணைத்துள்ளார். இந்த வீடியோவானது  தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.