நடப்பாண்டிற்கான இயற்பியல் துறையில் சாதித்தவர்களுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இயற்பியல் துறையில் சாதித்த 3 பேருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ், பியர் அகோஸ்டினி, ஃபெரென்க் க்ராஸ்ஸ் மற்றும் ஆன் எல்’ஹுல்லியர் ஆகியோருக்கு 2023 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளில் எலக்ட்ரான் இயக்கவியல் பற்றிய ஆய்வுக்காக ஒளியின் அட்டோசெகண்ட் துடிப்புகளை உருவாக்கும் சோதனை முறைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 3 கூட்டு வெற்றியாளர்களும் மனிதகுலத்திற்கு “அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்குள் எலக்ட்ரான்களின் உலகத்தை ஆராய்வதற்கான புதிய கருவிகளை வழங்கியுள்ளனர். எலக்ட்ரான்கள் நகரும் அல்லது ஆற்றலை மாற்றும் விரைவான செயல்முறைகளை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒளியின் மிகக் குறுகிய துடிப்புகளை உருவாக்குவதற்கான வழியை அவர்கள் நிரூபித்துள்ளனர்.”  

இயற்பியலுக்கான நோபல் பரிசு என்பது ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் ஆண்டுதோறும் இயற்பியல் துறையில் மனித குலத்திற்கு மிகச் சிறந்த பங்களிப்பைச் செய்தவர்களுக்கு வழங்கப்படும் விருது ஆகும் . நேற்று மருத்துவத்துறையில் சாதித்த 2 பி[பேருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.