பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியாக சமீபத்தில் அசிம் முனரி பொறுப்பேற்றதையடுத்து அவர் அமீரகத்திற்கு வருகை புரிந்தார். இந்நிலையில் அபுதாபியில்  உள்ள கசீர் அல் சாதி அரண்மனையில் அமீரக அதிபர் மேதகு சேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் பாகிஸ்தான் புதிய ராணுவ தலைமை தளபதி ஹசிம் முனிரை வரவேற்றுள்ளனர். அப்போது அமீரக அதிபர் புதிய ராணுவ தளபதிக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனையடுத்து அமீரக அதிபரின் வாழ்த்துக்களுக்கு பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இருதரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து பாதுகாப்பு துறையில் இருவரும் பேசினர். மேலும்  துபாயில் உள்ள ஜாபில் அரண்மனையில் அமீரக துணை அதிபரும், பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மேதகு சேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் உடன் பாகிஸ்தான் புதிய ராணுவ தலைமை தளபதி அசிம் முனிர் சந்தித்து பேசி உள்ளனர். இதில் துபாய் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாக கவுன்சில் தலைவருமான மேதகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ராஷித் அல் மக்தூம் உடன் இருந்துள்ளார்.