அமெரிக்க நாட்டின் நாசா விண்வெளி நிறுவனத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவரை தலைமை தொழில்நுட்ப வல்லுனராக தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்திய வம்சாவளியினரான ஏசி சரனியா விண்வெளி துறையின் நிபுணராக இருந்த நிலையில், தற்போது, அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனத்தின் புதிய தலைமை தொழில்நுட்ப வல்லுனராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர், நாசாவின் தலைமையகத்தில் அதன் நிர்வாகியான பில் நெல்சனின் முதன்மையான ஆலோசகராக பணிபுரிவார் என்று கூறப்பட்டிருக்கிறது.

மேலும், இவர் விண்வெளி பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறார். இது மட்டுமல்லாமல், விண்வெளி தொழில்நுட்பம் குறித்த பல முக்கியமான பதவிகளில் இருந்திருக்கிறார்.