பிரான்ஸையே அழித்து விடுவோம் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போரில் பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல், உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு கொடுத்து வருகிறார். இதனால், பிரான்ஸ் நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொள்வோம் என்று ரஷ்ய அதிபரின் ஆதரவாளர்கள் எச்சரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபரின் ஆதரவாளராக இருக்கும்  Vladimir Solovyov என்ற நபர், உக்ரைன் நாட்டிற்கு இம்மானுவேல் மேக்ரோன் தொடர்ந்து ஆயுதங்கள் அளித்துக் கொண்டிருக்கிறார். எனவே, பிரான்ஸ், எங்களை தாக்கிய பிறகு அவர்களை தாக்குவதற்கு பதிலாக முன்பாகவே பிரான்ஸ் நாட்டின் மீது தாக்குதல் மேற்கொள்வோம் என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், ரஷ்ய நாட்டின் ஓய்வு பெற்ற Andrey Gurulyov என்ற தளபதி பிரான்ஸ் இருக்கக் கூடாது என்று கூறி இருக்கிறார். பிரிட்டனோ, பிரான்ஸோ, நாட்டையே அழிக்கக்கூடிய அளவிற்கு எங்களிடம் ஆயுதங்கள் உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். பிரான்ஸ் என்று ஒரு நாடு இதற்கு முன் இருந்தது. தற்போது அது இல்லாமல் போய்விட்டது என்ற நிலை ஏற்பட்டால் எவ்வாறு இருக்கும்? என்று தெரிவித்திருக்கிறார்.