தமிழக பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் நேற்று அவர் தனது 52-வது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். இதையொட்டி, அங்கு தமிழக சட்டமன்றம் போன்ற வடிவில் பிரசார மேடை அமைக்கப்பட்டிருந்தது.
View this post on Instagram
இந்த நிகழ்ச்சியில், தமிழக பா.ஜனதா பொறுப்பாளர் அரவிந்த் மேனன் மற்றும் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் போது, ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பங்கேற்ற வள்ளிக்கும்மி நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஆர்வத்துடன் கண்ட நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலை, கலைஞர்களுடன் இணைந்து வள்ளிக்கும்மி ஆட்டம் ஆடி மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்ச்சி, அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
