காமெடி நடிகர் சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக அறிமுகமானார். தற்போதைய நிலையில் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் ஆக மாறிவிட்டார். இவர் பல போராட்டங்களுக்குப் மத்தியில் திரைத்துறையில் ஜொலித்து வருகிறார். இவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா என்று பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இதுவரை காமெடி கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்த சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

திரையுலகில் பல போராட்டங்களுக்குப் பிறகு நாயக அவதாரம் எடுத்துள்ள சூரி 2006ல் தான் வாய்ப்பு தேடி அலைந்தபோது, ஆர்யாவின் கலாப காதலன் பட ஆடிஷனுக்கு சென்றதாகவும், சாப்பிடாமல் இருந்ததால் மயங்கி விழுந்ததாகவும் கூறியவர், அதே இடத்தில்தான் தற்போது தனது அலுவலகம் அமைந்துள்ளதாகவும் மனம் திறந்துள்ளார். விடுதலை படத்திற்காக இவருக்கு பாராட்டுகள் குவியும் நிலையில், நாயகனாக நடிக்கவும் வாய்ப்புகள் குவிகின்றன.