தைலாபுரம் தோட்டத்தில் நடந்த பாமக முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மேடையிலேயே மிகவும் உருக்கமாகப் பேசி தொண்டர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
அன்புமணி ராமதாஸ் மற்றும் சவுமியா அன்புமணி ஆகியோர் தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும், பாமக-வில் இருக்கும் லட்சக்கணக்கான தொண்டர்கள்தான் தனது உண்மையான குடும்பம் மற்றும் பிள்ளைகள் என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்தார்.
கட்சிப் பதவிகள் மற்றும் பொறுப்புகளை வழங்கும் போது குடும்ப பாசம் குறுக்கே நிற்காது என்பதையும், உண்மையாக உழைக்கும் தொண்டர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதையும் சுட்டிக்காட்டவே அவர் இவ்வாறு பேசியதாகத் தெரிகிறது.
குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கட்சிக்குள் இருக்கும் வாரிசு அரசியல் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் ராமதாஸ் கையாண்டுள்ள இந்த ‘சென்டிமென்ட்’ அரசியல் தந்திரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
