தமிழகத்தின் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்ட நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் வானதி சீனிவாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது திடீரென கால் வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது கொடுக்கப்பட்ட மருந்துகளின் காரணமாக அலர்ஜி ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்னும் மூன்று நாட்களுக்கு அவர் சிகிச்சை பெற வேண்டிய நிலை இருக்கும் என மருத்துவமனை தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த நிலையில் தற்போது வானது சீனிவாசன் மருத்துவமனையில் இருந்தபடியே வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,

வணக்கம் உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும், எனக்காக இறைவனிடம் மனமுருக வேண்டிக் கொண்டதற்கும் மனமார்ந்த நன்றி  இந்த தருணத்தில் என்னுடன் நின்ற அனைத்து அண்ணன்களுக்கும், அக்காக்களுக்கும், தம்பி தங்கைகளுக்கும் உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் என் மனதில் பதிந்திருக்கிறது.

 

உங்கள் பிரார்த்தனையே என் வலிமை.. உங்கள் நம்பிக்கையே என் மருந்து.. விரைவில் குணமடைந்து உங்களிடையே வருவேன் மீண்டும் சந்திப்போம், வெற்றி கொண்டாடுவோம்!
இந்த தேர்தலில் நம் வெற்றி நிச்சயம் வெற்றி நமதே!   என்று பதிவிட்டுள்ளார்.