ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள் என்ற தலைப்பில் சாதனை படைத்த விண்வெளி விஞ்ஞானிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது. மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி இன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் மறு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இதற்காக ஒரு மணி நேரம் ஒதுக்கி இந்த காணொளியை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.