தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் அனைத்து பொறியியல் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. பொறியியல் பயிலும் மாணவர்களின் எதிர்கால நலனை கருதி பல சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது மீடியா சயின்ஸ் துறையில் பயின்று வரும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் புதிய பயிற்சியுடன் கூடிய திறன் வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக அயாதி ஒர்க் என்ற தனியார் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சியுடன் இணைந்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ள நிலையில் டிஜிட்டல் சயின்ஸ் துறையில் மாணவர்கள் திறனை வளர்த்து அவர்களின் வேலை வாய்ப்பு எளிதாக உறுதி செய்வதற்காக இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சிறப்பு பயிற்சிக்கு டிஜிட்டல் அட்வர்டைசிங் 360 டிகிரி என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் டிசம்பர் மாதம் வரையில் 100 மாணவர்களுக்கு திட்டமிட்டுள்ள பயிற்சி அட்டவணைப்படி பல்வேறு கட்டங்களாக வழங்கப்பட உள்ளது. துறை சார்ந்த எதிர்காலம் மற்றும் தற்போதைய விஷயங்கள் குறித்து மாணவர்கள் வேறு என்ன புதிய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது போன்ற பல பயிற்சிகள் இதன் மூலம் வழங்கப்படும். இதன் காரணமாக இந்த துறை மாணவர்கள் கல்வி பயின்ற உடன் அவர்களின் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.