அம்பாசமுத்திரம் மன்னார்கோவிலில் பணியாற்றி வந்த கோவில் அர்ச்சகர் கோவில் ஊழியர்களின் ஊதிய நிர்ணயத்தை மறு சீரமைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் அப்போதே நீதிபதி ஊழியர்களுக்கு முறையான ஊதியம் வழங்குவதை அரசே உறுதி செய்ய வேண்டும் என்றும் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் அடிப்படையில் ஏற்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை ஒவ்வொரு கோவில்களும் ஒவ்வொரு நிறுவனம். ஊதியம் நிர்ணயம் செய்யப்படும். அனைத்து கோவில் ஊழியர்களுக்கும் ஒரே ஊதியத்தை வழங்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதேசமயம் கோவில்களின் நிதி சிக்கல்களை தீர்க்க தற்போது பணியாளர் நல நிதியம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.