நேற்று ராமேஸ்வரத்தில் பாத யாத்திரையை தொடங் கியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். மொத்தம் 168 நாட்கள் நடைபெறும் யாத்திரையில் அண்ணாமலை 1700 கிமீ பயணம் செய்கிறார். ‘என் மண், என் மக்கள்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் யாத்திரையில் தமிழகம் முழுவதும் உள்ள மக்களுடன் அண்ணாமலை கலந்துரையாடுகிறார்.

இந்நிலையில் நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசாக திமுக உள்ளது என உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். அண்ணாமலையின் நடைப்பயணத்தை துவக்கி வைத்து பேசிய அவர், ‘அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர் கைதாகி உள்ளார். கைதாகிய நிலையிலும் அவர் அமைச்சராக இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார். மேலும், ‘அண்ணாமலை ஒரு ட்வீட் செய்தால் ஆட்சிக்கு ஆட்டம் ஏற்படும்’ என்றார்