விளை நிலத்தில் கால்வாய் தோண்டும் பணியை பார்த்து கண்ணீர் வந்ததாக உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன் (NLC) நிர்வாகம் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக நிலங்களை கையகப் படுத்தி வருகிறது. இதற்காக இரு தினங்களுக்கு முன் முழுதாக விளைந்திருந்த விவசாய நிலங்களுக்குள் ஜேசிபி வாகனங்களை செலுத்தியதால் விவகாரம் பூதாகரமானது. அங்கு பயிர் செய்திருந்த விவசாயிகள் பரிதவித்துப் போனார்கள். பச்சை பசேல் என்ற நிலத்தில் ராட்சத வாகனங்கள் நுழைந்தது அனைவரையும் உலுக்கியது.

இந்நிலையில் நெய்வேலியில் நெற்பயிரை புல்டோசர் கொண்டு அழித்ததற்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதி தண்டபாணி, பயிரை அறுவடை செய்யும் வரை 2 மாதங்கள் காத்திருக்க முடியாதா என NLCக்கு கேள்வி எழுப்பியதோடு, நிலத்தை எடுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் பயிர்கள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது எனவும் கூறினார்.