தமிழகத்தில் அனைத்து ஆவின் பால்களும் தங்கு தடை இன்றி கிடைக்கும் என்று ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மெஜந்தா, நீளம், பச்சை மற்றும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் வழக்கம் போல கிடைக்கும் என்றும் ஊதா நிற டிலைட் பால் சென்னை மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பச்சை நிற பால் பாக்கெட் நிறுத்தப்பட உள்ளதாகவும் அதற்கு பதில் டிலைட் பால் பாக்கெட் அறிமுகப்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஆவின் நிர்வாகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.