டிடிவி தினகரன் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதுவரை அரசியலில் ஈடுபடாத அவரது மனைவி முதல் முறையாக கணவருக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். போடி அருகே உள்ள கிராமங்களில் டிடிவி தினகரனுக்காக அவரது மனைவி அனுராதா வீடு வீடாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார். அவருக்கு ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து அனுராதா வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.