பாஜகவில் பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி  அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு மாநிலத் தலைவராகிய நான்,  என் சொந்த தொகுதியில் நான்தான் அமைப்பாளர். அந்த தொகுதிக்கே அமைப்பாளரும் நான் தான். அந்த அளவுக்கு களத்தில் வேலை செய்து வைத்திருக்கிறேன். இதனால் திருமாவளவன் தோல்வியை தழுவுவார் என்ற பயம் திருமாவளவனுக்கு வந்துவிட்டது.

எனக்கு ஒரு மாதத்திற்கு முன்பு அவர் சைடுல இருந்து தகவல் வந்துச்சு.  நான் தோத்துடுவேன்….  இந்த தொகுதியில் பெரியசாமி நின்னா நான் தோத்துடுவேன்,  தோக்கப் போறேன் அப்படிங்கற புலம்பல் எனக்கு கிடைத்தது.

அப்ப இந்த செய்தியை நான் கேசவநாயகதிடம் சொல்றேன். இப்படி இருந்தும் வாய்ப்பு இருக்கு,  நல்ல சூழல், கண்டிப்பா திருமாவளவனை தோற்கடித்து விடலாம். ஏனென்றால் அவர்கள் எல்லாரும் திருமாவளவன் தோற்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்போ திருமாவளவன் தோற்க வேண்டும் என்றால்,  அங்க நான் நிற்கணும் என்று தானே அர்த்தம்.

இந்த சூழல் போய்க்கொண்டிருக்கும் போது திடீர் என சொல்லிட்டு, நான் வேட்பாளராக வருவேன் என்று எதிர்பார்க்கிறேன், ஒரு பெண் வேட்பாளரை அங்கே கொண்டுவந்து போடுகிறார்கள். அப்போ இது கட்சியினுடைய குறிப்பா….. மாநில தலைவர் அண்ணாமலையின் சர்வாதிகாரப் போக்குனு நான் பார்க்கிறேன்….  ஏனென்றால் அவர் வந்து  என்னை கேட்கணும்ல,  எதுவுமே பண்ணல… அப்ப நான் உழைச்சது,  நீங்க பண்ணது,  நான் இவ்வளவு அடி, உதை வாங்குனது.

இது மட்டும் இல்ல,  தமிழ்நாடு முழுக்க இருக்கின்ற பட்டியல் சமூகத்திற்கு எப்படி அது மரியாதையாக இருக்கும் ? ஒரு மாநில தலைவராகிய எனக்கே இந்த மரியாதை இல்லைனா….  பட்டியல் சமுதாயத்திற்கு,  பாரதிய ஜனதா கட்சியில் என்ன மரியாதை இருக்கிறது ? அதனாலதான் இதுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும். நமக்கு சரியான அங்கீகாரம் வேண்டும். பட்டியல் சமுதாயத்திற்கு ஒரு குறிப்பு,  நல்ல வழிகாட்டுதல் கொடுக்க வேண்டும் அப்படிங்குற அடிப்படையில் தான் நான் இன்னைக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளேன் என தெரிவித்தார்.