தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்வாக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.
அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்த ஓ.பன்னீர்செல்வத்துடன், அவரது மகனும் முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத், ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சித் துண்டு அணிவித்து முறைப்படி வரவேற்றார்.
View this post on Instagram
கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஐயப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேராக தலைமைச் செயலகம் சென்றனர். அங்கு சட்டப்பேரவைச் செயலாளரைச் சந்தித்து, தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறப்பதற்கான ராஜினாமா கடிதத்தை வழங்கினர்.
திமுகவில் இணைந்த கையோடு, ஓ.பன்னீர்செல்வம் தனது காரில் மாற்றங்களைச் செய்துள்ளார். அவரது காரின் முன்பகுதியில் திமுகவின் உடன்பிறப்புக் கொடி கட்டப்பட்டுள்ளது. மேலும், காரின் முகப்புப் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படம் பொருத்தப்பட்டுள்ளது.
அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் திமுகவில் இணைந்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
