நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகத் தவறான அல்லது தனிப்பட்ட வாழ்வைப் பாதிக்கும் வகையிலான செய்திகளை ஊடகங்கள் வெளியிடக் கூடாது எனத் தடை கோரி சங்கீதா தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்ச்சியாகப் பரப்பப்படும் இத்தகைய செய்திகளால் தான் மனதளவில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவதாக அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, தொலைக்காட்சி அலைவரிசைகள், நாளிதழ்கள், யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விவாகரத்து தொடர்பான செய்திகளை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று அவர் நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் நேற்று நடிகர் விஜய் வேறொரு நடிகை உடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும் கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த விவகாரம் தனக்கு தெரிந்ததிலிருந்து ஒரே வீட்டில் இருந்து நிலையிலும் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
