சென்னையில் கடந்த இரு தினங்களாக ஆபரண தங்கத்தின் விலை கணிசமாக குறைந்த நிலையில் இன்று விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தில் விலை ஒரே நாளில் சவரனுக்கு 2400 வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,21,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 15,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 16,582 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,32,656 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 5 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 3,00,000 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.