ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், அமைச்சர் மரிய வில்சன் பொதுமக்களுடன் மிகவும் கலகலப்பாகவும் இயல்பாகவும் கலந்துரையாடினார்.

அப்போது சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் அமைச்சரிடம் மரியாதையின் அடையாளமாக கைகளைக் கட்டிக்கொண்டு நின்றதைக் கண்ட அமைச்சர், உடனடியாக அவர்களைக் கைகளைக் கட்ட வேண்டாமென அன்புடன் கேட்டுக்கொண்டார்.

“>

 

“யார் முன்னாடியும் கைகளைக் கட்டிக்கொண்டு நிற்க வேண்டிய காலம் முடிந்துவிட்டது, நாம் அனைவரும் சமம்” என்று கூறிய அமைச்சர், பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அதிகார வர்க்கத்திற்கும் மக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் வகையில் கனிவான அணுகுமுறையை வெளிப்படுத்தியது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.