மத்திய அரசின் ஒருபட்சமான தொகுதி மறுவரையறை முடிவுக்கு எதிராக அரசியல் பேதங்களைக் கடந்து அனைத்துக் கட்சிகளும் ஒற்றைக் குரலில் குரல் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.

இது சாதாரண அரசியல் விவகாரம் அல்ல என்றும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொகுதி மறுவரையறை விவகாரம் என்பது ஒட்டுமொத்த மாநிலத்தின் எதிர்காலத்தோடு தொடர்புடைய மிக முக்கியமான பிரச்சினை என்பதால், இதில் கட்சிகள் தங்களது குறுகிய அரசியல் கணக்குகளைத் தவிர்க்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாநிலத்தின் உரிமைகளும் நலன்களுமே எல்லாவற்றையும் விட மேலானது என்றும், மத்திய அரசின் தன்னிச்சையான நடவடிக்கையை எதிர்க்க அனைத்துக் கட்சிகளும் ஒரே அணியில் திரள வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.

“>

 

மாநிலத்தின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்கும் மத்திய அரசின் இந்த நகர்வுக்கு எதிராகத் தமிழக அரசியல் களத்தில் விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், அமைச்சரின் இந்தப் பகிரங்க வேண்டுகோள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.