பெரியார் மற்றும் அம்பேத்கர் போன்றோரின் கொள்கைகளையும், சமூக நீதி அரசியலையும் விஜயும் வலியுறுத்துவதால், அவருடன் கூட்டணி அமைப்பதில் எந்த முரண்பாடும் இல்லை என்று திருமாவளவன் தெளிவுபடுத்தியுள்ளார்.

நாங்கள் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கவில்லை, இதை அரசியல் நுட்பமாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர, குழப்பமாகப் பார்க்கக்கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.

ஆட்சி அமைக்கத் தேவையான இரண்டு இடங்களை தவெகவுக்கு வழங்கியதன் மூலம், அதிமுக அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவை நாடும் நிலையைத் தடுத்து நிறுத்தியதே எங்களின் முக்கிய நோக்கம் என்றும், இதன் மூலம் மதச்சார்பற்ற கூட்டணியைக் காப்பாற்ற முடிந்தது என்றும் அவர் விளக்கமளித்தார்.

சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களைக் கண்டு தொண்டர்கள் குழப்பமடைய வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட திருமாவளவன், தமிழக அரசியலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

“>

 

வாக்கு சதவீத இழப்புகள் மற்றும் அரசியல் மாற்றங்கள் குறித்துப் பேசாமல், சிறுத்தைகளை மட்டும் குறிவைத்து பலவீனப்படுத்தச் சிலர் திட்டமிட்டுச் செயல்படுகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அந்தச் சதித் திட்டங்களுக்கு இடம் கொடுக்க மாட்டோம் என்று உறுதிபடத் தெரிவித்த அவர், தமிழக அரசியல் எப்போதும் சிறுத்தைகளை மையப்படுத்தியே இயங்கும் என்று தனது உரையை நிறைவு செய்தார்.