தேர்வில் தோல்வியடைந்த ஒரு பள்ளி மாணவி, தனது பெற்றோரை ஆசிரியர் சந்திப்பிற்கு (PTM) அழைத்துச் செல்ல முடியாத இக்கட்டான சூழலில் சிக்கினார். நண்பர்களையும் முழுமையாக நம்ப முடியாத நிலையில், அவர் ஒரு சாமர்த்தியமான முடிவை எடுத்தார். ரேபிடோ (Rapido) பைக் டாக்ஸியை முன்பதிவு செய்த அந்த மாணவி, தன்னிடம் வந்த ஓட்டுநரிடம் தனது அண்ணனாக நடித்து பள்ளிக்கு வருமாறு ஒரு விசித்திரமான கோரிக்கையை வைத்தார்.
அந்த ஓட்டுநரும் மாணவியின் நிலையைப் புரிந்து கொண்டு, பள்ளிக்குச் சென்று அவரது அண்ணனாக நடித்து அந்தச் சூழலைச் சமாளித்தார். இதன் மூலம் வீட்டில் ஏற்படவிருந்த பெரிய பிரச்சனையை அந்த மாணவி புத்திசாலித்தனமாகத் தவிர்த்தார். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி, அந்தப் பெண்ணின் சமயோசித புத்தியைக் கண்டு பலரையும் வியப்பிலும் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
