அர்ஜென்டினாவில் உள்ள ஒரு வங்கியில் நடந்த விசித்திரமான சம்பவம் தற்போது இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்த வங்கியில் கூட்டம் அதிகமாக இருந்ததால், வரிசையில் நிற்க விரும்பாத நபர் ஒருவர், தனக்குக் காலில் பலத்த காயம் ஏற்பட்டது போலவும், நடக்கவே முடியாமல் அவதிப்படுவது போலவும் நடித்து உள்ளே சென்றார். மாற்றுத்திறனாளிகளுக்கான முன்னுரிமை வரிசையைப் பயன்படுத்தி, மிக விரைவாகத் தனது வேலையை முடித்துவிட்டு எதார்த்தமாக வெளியேறினார்.
Caught on video in Argentina, a man faked a disability for priority service at a bank, then walked out with no limp at all like nothing happened 😶 pic.twitter.com/DQV4klPi26
— Tansu Yegen (@TansuYegen) April 24, 2026
ஆனால், வங்கியின் கதவைத் தாண்டிய அடுத்த நொடியே அந்த நபர் செய்த காரியம் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உள்ளே நொண்டிக் கொண்டே சென்றவர், வெளியே வந்ததும் எந்த வலியும் இல்லாதது போல மிகச் சாதாரணமாக நடக்கத் தொடங்கினார். இந்த வீடியோ தற்போது ‘எக்ஸ்’ (X) தளத்தில் வெளியாகி, “வரிசையில் நிற்க சோம்பேறித்தனம் பட்டு இப்படியா ஏமாற்றுவது?” எனப் பலரையும் கிண்டலாகக் கமெண்ட் செய்ய வைத்துள்ளது.
