அண்ணாமலை புகைப்படத்தை பெண் ஒருவர் மிதிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. தென் சென்னை தொகுதி வேட்பாளராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன், அந்த பகுதிகளில் ஆட்டோக்களில் பேனர் ஒட்டி வாக்கு சேகரித்து வருகிறார். அப்படி ஆட்டோ ஒன்றில் ஒட்டப்பட்டு இருந்த பேனரில் அண்ணாமலை புகைப்படமும் இடம் பெற்று இருந்தது.

இன்று காலை அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த பெண்மணி ஒருவர், பேனரில் இருந்த அண்ணாமலை முகத்தில் மிதித்துவிட்டு சென்றார். இந்த வீடியோவை சிலர் இணையத்தில் பரவ விட்டுள்ளனர்.