திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த கதீஜா என்ற பெண், கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அவருக்கு இர்ஃபான் என்ற கார் டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கதீஜாவின் 7-ம் வகுப்பு படிக்கும் மகளை இர்ஃபான் ஏலகிரிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், அந்தச் சிறுமியை வன்கொடுமை செய்ய அவரது சொந்தத் தாயே உடந்தையாக இருந்தது தெரியவந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

​பெற்ற தாயே தன் மகளுக்கு பாதுகாப்பு தராமல், இப்படி ஒரு கொடூர செயலுக்குத் துணையாக இருந்ததைக் கேட்டு அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். இதையடுத்து கார் டிரைவர் இர்ஃபான் மற்றும் சிறுமியின் தாய் கதீஜா ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.