நாமக்கல் மாவட்டம் சேலத்தில் இருந்து திருச்சிக்கு நேற்று மாலை அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுந்தரராஜன் என்பவர் ஒட்டியுள்ளார். கரூரை சேர்ந்த சரவணகுமார் என்பவர் இதில் கண்டக்டர் ஆக இருந்தார். இந்நிலையில் பஸ் சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதன் சந்தையில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற லாரி மீது மோதியுள்ளது. இதில் பஸ் டிரைவர், கண்டக்டர் உட்பட 7 ஆண்கள், 5 பெண்கள் என மொத்தம் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் விபத்து ஏற்பட்டதால் வாகனங்களை போலீசார் மாற்று பாதையில்  திருப்பி விட்டனர். இதனை தொடர்ந்து வெளியான முதல் கட்ட விசாரணையில் லாரியின் டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து லாரியில் மோதியதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.