தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அரசு சட்டக் கல்லூரிகளில் உள்ள 1692 இடங்களுக்கும் தனியார் கல்லூரிகளில் உள்ள 312 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை காண விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது. இந்த கல்லூரிகளில் ஐந்து ஆண்டு சட்டப் படிப்புகளில் சேர வருகின்ற மே 10 முதல் மே 31ஆம் தேதி வரை http://tndalu.ac.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். முதுகலை சட்டம் ஏற்பட்டு மாணவர் சேர்க்கை தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
