தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள சேவை வழங்கும் பணிகள் இந்த மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆன்லைன் மதிப்பீடுகள், தொழில்நுட்ப பயிற்சிகளை ஊக்குவிக்கும் விதமாக தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிகளிலும் 100 எம்பிபிஎஸ் வேகம் கொண்ட இணைய சேவை வழங்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதன் மூலமாக மாணவர்கள் கடினமான பாடப் பொருட்களை எளிமையாக காணொளி மூலமாக கற்பிப்பதற்கும் மாணவர்கள் கற்ற பாடங்களை ஆன்லைன் மதிப்பீடுகள் மூலமாக பயிற்சி வழங்குவதற்கும் வழிவகை செய்யும்.