தமிழக பதிவு துறையில் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக வெளியான அரசிதழில், ரசீது ஆவணத்திற்கு 20 ரூபாய் இருந்து 200 ரூபாய், தனிமனைக்கான கட்டணம் 200 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய், பிரமாண பத்திரப்பதிவு மற்றும் ஒப்பந்த பதிவு கட்டணம் 20 ரூபாய் இருந்து 2000 ரூபாய், செட்டில்மெண்ட், பாகம், விடுதலை ஆவணங்களுக்கு நான்காயிரம் ரூபாய் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.