நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆண்களுக்கான குடும்ப நலவை சிகிச்சையில் மாநிலத்தில் நாகை மாவட்டம் முதலிடம் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த மருத்துவ அலுவலர்கள், அரசு அலுவலர்களை பாராட்டி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் விஸ்வநாதன், இணை இயக்குனர் ஜோஸ்பின் அமுதா போன்றோர்  முன்னிலை வகித்தனர். மாவட்ட விரிவாக்க கல்வியாளர் சாந்தி வரவேற்றுள்ளார்.

இதனை அடுத்து விழாவில் கலெக்டர் கூறியதாவது, நாகை மாவட்டம் 142 ஆண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து மாநில அளவில் முதலிடத்தில் பிடித்து சாதனை படைத்துள்ளது. குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு ரூ.3,900 ஊக்குவிப்பு தொகையாக வழங்கப்படுகிறது. மேலும் இந்த சிகிச்சை செய்ய ஊக்குவிப்புக்கு  காரணமாக இருந்த 131 நபர்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாய்மார்கள் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற பல பணிகளில் மேன்மேலும் உயர்ந்து பல இலக்கை அடைய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.