தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை வெயிலின்  தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி குளிர் பிரதேசமாக இருப்பதால் கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அங்கு அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் கோடை காலத்தில் வெப்பம் குறைவாக இருக்கக்கூடிய ஊட்டியில் தற்போது அதிக அளவில் வெப்பம் பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி நேற்று ‌ 84.2 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதாவது இயல்பை விட 10 டிகிரி பாரன்ஹீட் அதிகரித்துள்ளது. மேலும் குளிராக இருக்கக்கூடிய ஊட்டிக்கே இந்த நிலைமையா என்று நினைக்கும் அளவுக்கு அங்கு வெயிலின் தாக்கம் இருப்பது சுற்றுலா பயணிகள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.