சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் இந்த நிறுவனத்தின் ஜியோமி போன்கள், ரெட்மி மற்றும் போகோ ஸ்மார்ட் ஃபோன்களில் ஆபத்தான வைரஸ் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இந்த வைரசால் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்களின் கைகளுக்கு செல்லும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளனர். இந்த போன்களில் சுமார் 20 பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் சிக்கல்களை சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.