இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வரும் ஒரு காணொளி, பார்ப்போரை ஒரே நேரத்தில் சிரிக்கவும் அதே சமயம் அந்தச் சிறுவன் மீது பரிதாபப்படவும் வைத்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு சிறுவன் தனது தாயுடன் சேர்ந்து சிறிய வண்டி ஒன்றில் விளையாடிக் கொண்டிருக்கிறான். தாய் வண்டியை ஓட்ட, அது எதிர்பாராத விதமாகத் தடுமாறி நேராகச் சென்று ஒரு சிறிய பள்ளத்தில் விழுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுவன், எப்படியோ கஷ்டப்பட்டு பள்ளத்திலிருந்து வெளியே வருகிறான். ஆனால், அழுது கொண்டே அங்கிருந்து திரும்பி வரும்போது, அடுத்த சில நொடிகளிலேயே எதிர்பாராத விதமாக மீண்டும் ஒரு பள்ளத்தில் விழுகிறான்.
ஒரே நேரத்தில் அடுத்தடுத்து நடந்த இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் காண்போரைக் கவலை கொள்ளச் செய்தாலும், அந்தச் சூழல் வேடிக்கையாகவும் அமைந்துள்ளது. சமூக வலைதளங்களில் இந்தக் காணொளி காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் இனி எப்போதும் அவன் தனது தாயை நம்பி வண்டியில் செல்ல மாட்டான்” என்று வேடிக்கையாக கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
