இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வரும் ஒரு திருமணக் காணொளி இணையவாசிகளைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், புதுமணத் தம்பதியினர் ஒருவருக்கொருவர் இனிப்பு ஊட்டி மகிழ்கின்றனர். அப்போது மணமகன் ஆசையாகத் தந்த இனிப்பை வாங்குவதற்கு மணமகள் நீண்ட நேரம் யோசிக்கிறார். பின்னர், திடீரென அந்த இனிப்பைத் தனது கையில் வாங்கி அப்புறப்படுத்துவது போல் தூக்கி வீசிவிடுகிறார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத மணமகன், அடுத்த நொடியே தனது வாயில் இருந்த இனிப்பையும் வெளியே எடுத்து வீசிவிடுகிறார். இந்த அதிரடியான காட்சி பார்ப்போரை ஒரு நிமிடம் திகைக்க வைத்துள்ளது.

​இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில், மணமகனின் சமயோசித புத்தியைக் கண்டு நெட்டிசன்கள் வியந்து பாராட்டி வருகின்றனர். “மணமகள் இப்படித்தான் செய்யப்போகிறார் என்பது மணமகனுக்கு முதலிலேயே தெரிந்திருக்கிறது, அதனால்தான் அவர் இனிப்பை விழுங்காமல் வாயிலேயே வைத்திருந்துள்ளார்” என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கணவன் – மனைவிக்கு இடையிலான அந்தப் புரிதலையும், அதே சமயம் அந்தச் சூழலில் நிலவிய ஒருவித இறுக்கமான தருணத்தையும் இந்தக் காணொளி வெளிப்படுத்துவதாக இணையத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன.